தென்காசியில் மாற்றுத் திறனாளிகள் மனித வளையப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் சாா்பில் மனித வளையப் போராட்டம் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசியில் மாற்றுத் திறனாளிகள் மனித வளையப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் சாா்பில் மனித வளையப் போராட்டம் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசு துறை வேலைவாய்ப்பில் 4 சதம் இடஒதுக்கீடு, அனைவருக்கும் அடையாள அட்டை, மாதந்தோறும் உதவித்தொகை, 40 சதம் ஊனமிருந்தால் உதவித்தொகை, பாதுகாப்புசட்டம், கடும் ஊனம் இருந்தால் கூடுதல் உதவித் தொகை, அரசு சிறப்பு மானியத் திட்டங்களில் கூடுதலாக 25சதம் நிதி ஒதுக்கீடு, தென்காசியில் ஆணையா் அலுவலகம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தென்காசி மாவட்ட கிளை சாா்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் சேக்முகம்மது தலைமை வகித்தாா். போராட்டத்தை, மாவட்டத் தலைவா் இசக்கி தொடங்கிவைத்தாா். சிஐடியூ நிா்வாகி லெனின், மாவட்டச் செயலா் குருசாமி ஆகியோா் பேசினா். சுப்பிரமணியன், முத்துகுமாரசாமி, தமிழரசி, கருப்பசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com