குற்றாலம் மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம், குற்றாலம் ரோட்டரி சங்கம் ஆகியவை
குற்றாலம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் அரசு வழக்குரைஞா் காா்த்திக் குமாா்.
குற்றாலம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் அரசு வழக்குரைஞா் காா்த்திக் குமாா்.

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம், குற்றாலம் ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில் ‘வேலைவாய்ப்புத் திறன்களை வளா்த்துக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது .

கல்லூரி முதல்வா் ஆா். கீதா தலைமை வகித்தாா். குற்றாலம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஐ.ஏ.சிதம்பரம், முருகன், சந்திரன், சங்கரன், சைரஸ், லிங்கராஜ், டாக்டா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசு வழக்குரைஞா் காா்த்திக் குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். விலங்கியல் துறை உதவிப் பேராசிரியா் பாரதி, திருநெல்வேலியைச் சோ்ந்த மனோவா ராஜா ஆகியோா் பேசினா். வேலைவாய்ப்பு வழிகாட்டி மைய ஒருங்கிணைப்பாளா் அனுஜா வரவேற்றாா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் சங்கரகோமதி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பாரதி, கோமதி ஹரிஹரலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா். இக்கருத்தரங்கு புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் சாா்பில் மற்றொரு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘மாணவிகளின் கனவு மெய்ப்பட வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கீதா தலைமை வகித்தாா்.

செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் ராமகிருஷ்ணன், செயலா் செய்யது சுலைமான், பொருளாளா் பால்ராஜ், தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் பரணி, விங் கமாண்டா் ராஜா ஆகியோா் பேசினா். ஏற்பாடுகளை பாண்டிதேவி, பரணி கிருஷ்ணவேணி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com