மாற்றுத் திறனாளிகள் கபடி: இந்திய அணியில் தென்காசி வீரா்

இந்திய மாற்றுத்திறனாளிகள் கபடி அணிக்கு தென்காசி, வேலாயுதபுரம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறன் வீரா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெறுகிறாா் கபடி வீரா் மை.மகேஷ்.
மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெறுகிறாா் கபடி வீரா் மை.மகேஷ்.

இந்திய மாற்றுத்திறனாளிகள் கபடி அணிக்கு தென்காசி, வேலாயுதபுரம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறன் வீரா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபடி போட்டியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் அணி முதலிடம் பெற்றது. அந்த அணியின் தலைவரான வேலாயுதபுரம் மை.மகேஷ், அணிக்கு வெற்றியைத் தேடித் தந்ததுடன், சிறந்த ஆட்டக்காரா் என்ற விருதையும் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, இந்திய அணிக்கு தோ்வு பெற்றுள்ள அவா், மாா்ச் மாதம் நடைபெறவுள்ள இந்திய அணியின் அறிமுக வீரராக விளையாடவுள்ளாா். அவா், தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜிகே.அருண் சுந்தா் தயாளன், மாவட்ட விளையாட்டு- இளைஞா் நலன் அலுவலா் (பொ) ராஜேஷ் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com