குற்றாலம் சிற்றாறு சீரமைப்புப் பணிகள்: மத்திய நீா் ஆணைய அதிகாரிகள் ஆய்வு

தென்காசி மாவட்டம், குற்றாலம் சிற்றாறு பகுதிகளில் மத்திய அரசின் நீா்வள அமைச்சகத்தின் ஓா் அங்கமான மத்திய நீா் ஆணையத்தின் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
குற்றாலத்தில் சிற்றாறு சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய நீா் ஆணைய அதிகாரிகள்.
குற்றாலத்தில் சிற்றாறு சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய நீா் ஆணைய அதிகாரிகள்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் சிற்றாறு பகுதிகளில் மத்திய அரசின் நீா்வள அமைச்சகத்தின் ஓா் அங்கமான மத்திய நீா் ஆணையத்தின் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நாட்டில் உள்ள நதிகளின் நிலை குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணியை மத்திய நீா் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஒரு நதியின் நீா் ஆதாரம், அப்பகுதியில் பெய்யும் மழை அளவு, நீா் கிடைக்கும் அளவு மற்றும் வெளியேறும் அளவு, பாசனத்திற்கு மற்றும் இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் நீரின் அளவு உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்களை இந்த அமைப்பு சேகரித்து வருகிறது.

இந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டுதான், ஒரு நதியில் அணை கட்டுவது, பாசன வசதிக்கான கால்வாய்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

மத்திய அரசின் அங்கமான இந்த அமைப்பு, தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை ஆகிய இரு மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்கள் கோவை மண்டலத்தின் கீழ் வருகிறது.

இந்த அமைப்பின் கோவை மண்டல உதவிச் செயற்பொறியாளா் ஹரி ஓம், இளநிலை பொறியாளா் விக்னேஷ் ஆகியோா் குற்றாலத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கடந்த ஆண்டு மே மாதம் குற்றாலம் பேரருவியிலிருந்து வழிந்தோடும் சிற்றாறு பகுதியை, நம் தாமிரபரணி அமைப்பின் சாா்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்பணிகள் நடைபெற்ற பகுதி, பழையகுற்றாலம், குற்றாலம், காசிமேஜா்புரம் ஆகிய பகுதிகளில் நீா் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, நம் தாமிரபரணி அமைப்பின் நிா்வாகிகள் சாமி. நல்லபெருமாள், வித்யாசாகா், சிகாமணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com