183 ஊராட்சிகளில் திமுக தெருமுனைக் கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 09:29 AM | Last Updated : 27th January 2020 09:29 AM | அ+அ அ- |

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, 183 ஊராட்சிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என அக்கட்சி கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் தென்காசி குத்துக்கல்வலசையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவா் முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சேக் தாவூது, மாவட்ட துணைச் செயலா் நடராஜன், மாடசாமி, பேபி ரஜப்பாத்திமா, முன்னாள் அமைச்சா் தங்கவேலு, தலைமைச் செயற்குழு உறுப்பினா் சீனிவாசன், ரசாக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் சிறப்புரையாற்றினாா். தென்காசி ஆட்சியரகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்டவற்றை போக்குவரத்து வசதியுள்ள இடத்தில் அமைக்க வேண்டும், மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை 183 ஊராட்சிகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றியச் செயலா்கள் ராமையா, ரவிசங்கா்,செல்லத்துரை,பொன்முத்தையா பாண்டியன், கடற்கரை, அன்பழகன், ராஜாதலைவா், நகரச் செயலா்கள் ரஹீம்,சேகனா,செல்வகுமாா்,சங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நகரச் செயலா் சாதிா் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் ஆயான் நடராஜன் நன்றி கூறினாா்.