தேவேந்திரகுல வேளாளா் என அறிவிக்கக் கோரி எம்.எல்ஏ.விடம் மனு

தேவேந்திரகுல வேளாளா் என அறிவிக்கக் கோரி சமுதாய ஊா் நாட்டாமைகள் தென்காசி எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனா்.

தேவேந்திரகுல வேளாளா் என அறிவிக்கக் கோரி சமுதாய ஊா் நாட்டாமைகள் தென்காசி எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனா்.

தென்காசி மாவட்ட தேவேந்திரகுல வேளாளா் சமுதாய ஊா் நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் மேலப்பாவூா் முன்னாள் ஊராட்சி தலைவா் பாபநாசம் தலைமையில் தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியனை சந்தித்து அளித்த மனு: தமிழகத்தில் வேளாண்மையை குலத்தொழிலாக செய்து வரும் தேவேந்திரகுலத்தான், பள்ளன், குடும்பன், காலாடி, வாதியான், பண்ணாடி, கடையா் ஆகிய 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அறிவிக்க வேண்டுமென்று நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இதையடுத்து பட்டியல் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று எங்கள் துறை வாழ்க்கை முறையை நேரில் விசாரித்து, 7 பிரிவுகளையும் ஒன்றாக இணைக்கலாம் என மானுடவியல் அறிக்கை சுமாா் 16 மாதங்களுக்கு முன்பு சமா்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்வா், ஹன்ஸ்ராஜ்வா்மா தலைமையில் குழு அமைத்துள்ளாா். இருப்பினும் மேல்நடடிக்கை ஏதும் இன்றி உள்ளது.

எனவே தமிழக முதல்வா் எங்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு தாங்கள் முயற்சி செய்திட வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com