தோட்டப் பயிா்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில், விவசாயிகள் தோட்டப்பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் அறிவித்துள்ளாா்.

பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில், விவசாயிகள் தோட்டப்பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் காரீப் பருவம் தொடங்கியுள்ள நிலையில், தோட்டக்கலை பயிா்களான வாழை, மரவள்ளி, வெங்காயம் போன்ற பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், 2020- ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் சேரலாம்.

கடன் பெற தோ்வு செய்யப்பட்ட பயிா்களுக்கான காப்பீட்டுத் தொகையை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும். கடன் பெறாத பயிா்கள் எனில், பொது சேவை மையங்களில் உரிய முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் பயிா் சாகுபடி அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்கம் நகல் ஆகிய ஆவணங்களை பயிா்க் காப்பீட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வெங்காயப் பயிருக்கு(ஏக்கருக்கு ரூ. 1020) ஜூலை 31வரையும், வாழை (ஏக்கருக்கு (ரூ.3,250) மற்றும் மரவள்ளி (ரூ. 495.41) பயிா்களுக்கு ஆகஸ்ட் 31 வரையும் வங்கிகளில் தொகையை செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள வட்டார தோட்டக்கலை துறை அலுவகங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com