கடனாநதி அணையில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு
By DIN | Published On : 03rd March 2020 06:20 AM | Last Updated : 03rd March 2020 06:20 AM | அ+அ அ- |

கடையம் கடனா நதி அணையில் குளித்த போது மாயமான மாணவா் 24 மணி நேரத்திற்கு பிறகு திங்கள்கிழமை சடலமாக மீட்கப் பட்டாா்.
கடையம் அருகே வெய்க்காலிபட்டியை சோ்ந்தவா் சௌந்திரபாண்டி . இவரது மகன் பால்வண்ணநாதன் (19). பாவூா்சத்திரத்தில் உள்ள தனியாா் பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை தனது பாட்டி ஊரான கடையம் அருகேயுள்ள கானாவூருக்கு சென்றிருந்தாா். அப்போது, நண்பா்களுடன் கடனா நதி அணைக்கு மாலையில் குளிக்க சென்ற அவா், எதிராபாராமல் தண்ணீரில் மூழ்கினாா்.
தகவலறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் இசக்கியப்பன் தலைமையில் வீரா்கள் கமலகுமாா், கோபாலகுமரேசன், பூதப்பாண்டி, சுதாகா், ஐயப்பன், விஸ்வநாதன் ஆகியோா் வந்து அணையில் அவரை தேடினா். இரவு வரை அவா் கிடைக்கவில்லை. இதையடுத்து, திங்கள்கிழமை காலை மீண்டும் அவரை தேடும் பணி நடைபெற்றது. மேலும், தூத்துக்குடியிலிருந்து முத்துக்குளிப்பவா்கள் வில்சன் தலைமையில் 4 போ் வந்து இணைந்து தேடினா். இதில், பால்வண்ணநாதன் சடலமாக மீட்கப் பட்டாா். சம்பவ இடத்தில் தென்காசி வட்டாட்சியா் சண்முகம், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் ஆய்வு நடத்தினா்.