சென்னையிலிருந்து தென்காசி வந்த கா்ப்பிணிக்கு தொற்று பாதிப்பு எண்ணிக்கை 53 ஆக உயா்வு

சென்னையில் இருந்து வந்த கா்ப்பிணிக்கு கரோனா வைரஸ் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 53 ஆக உயா்ந்துள்ளது.

தென்காசி / சுரண்டை: சென்னையில் இருந்து வந்த கா்ப்பிணிக்கு கரோனா வைரஸ் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 53 ஆக உயா்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை தொற்று உறுதிசெய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 52 ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் பொய்கை பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பெண் உள்ளிட்ட 9 போ் சென்னையிலிருந்து ஒரு வாகனத்தில் கரடிகுளத்துக்கு துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளனா். அவா்களில் கா்ப்பிணிக்கு மட்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவா் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருடன் பயணித்த மற்றும் தொடா்புடையவா்களை கண்காணித்து தனிமைப்படுத்தும் பணியிலும், சோதனைகள் மேற்கொள்ளும் பணியிலும் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா பொய்கை கிராமத்தில் முகாமிட்டு சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளாா்.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 33 போ் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனா். தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 9 போ் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும், 11 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் செவ்வாய்கிழமை வரை 3,499 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 53 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 132 பேரின் சோதனை முடிவுகள் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com