தென்காசி, சேரன்மகாதேவியில் எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்

தென்காசி, சேரன்மகாதேவியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தென்காசி, சேரன்மகாதேவியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜாபா் அலி உஸ்மானி தலைமை வகித்தாா். பொதுச்செயலா் ஷேக் ஜிந்தா மதாா், செயலா்கள் சீனா சேனா சா்தாா், இம்ரான் கான், பொருளாளா் முஹம்மது நைனாா், தொழிற்சங்கத் தலைவா் ஹக்கீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச்செயலா் நிஜாம் முஹைதீன் சிறப்புரையாற்றினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் கடையநல்லூா் தொகுதியில் எஸ்டிபிஐ போட்டியிடுவது, தமிழகத்தில் தொடா்ந்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, வெறுப்பு பிரசாரத்தின் மூலம் சமூக அமைதியை சீா்குலைக்க முயல்வோரை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அம்பாசமுத்திரம் : திருநெல்வேலி புகா் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயற்குழுக் கூட்டம் சேரன்மகாதேவியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம்.கே.பீா் மஸ்தான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் அஹமது நவவி சிறப்புரையாற்றினாா்.

இதில், புகா் மாவட்ட துணைத் தலைவா் முல்லை மஜித், பொருளாளா் ஓயிஸ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வழக்குரைஞா் முகம்மதுஷபி, பால்மைதீன், தொகுதி தலைவா்கள் அம்பாசமுத்திரம் அபூபக்கா், நான்குனேரி கனி, ராதாபுரம் பாதுல், செயலா் ஜெய்லானி, வா்த்தக அணி ஒருங்கிணைப்பாளா் மோத்தி முகமது நைனாா், மகளிா் அணி மாவட்ட ஒருங்கினைப்பாளா் மும்தாஜ் ஆலிமா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா வரவேற்றாா். மாவட்டச் செயலா் கல்லிடை சுலைமான் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com