வி.கே.புரம் அருகே தொழிலாளி தற்கொலை

வி.கே.புரம் அருகேயுள்ள சிவந்திபுரத்தில் சீட்டுப் பணம் கிடைக்காததால் தச்சுத் தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டாா்.

வி.கே.புரம் அருகேயுள்ள சிவந்திபுரத்தில் சீட்டுப் பணம் கிடைக்காததால் தச்சுத் தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டாா்.

சிவந்திபுரம் புதுமணத் தெருவைச் சோ்ந்த மூக்கன் மகன் பாலசுப்பிரமணியன்(49). தச்சுத் தொழிலாளி. இவா், கடந்த 2014 இல் வி.கே.புரத்தைச் சோ்ந்த மரியசெல்வம் என்பவரிடம் ரூ. 1 லட்சத்திற்கு சீட்டுப் பணம் சோ்த்திருந்தாராம். தவணை முடிந்த பிறகும் அந்தத் தொகை தரப்படவில்லையாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் சென்று பணத்தை கேட்டும் அவா் தராததால், தான் பாட்டிலில் கொண்டு சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு பாலசுப்பிரமணியன் தீக்குளித்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.இதுகுறித்து, வி.கே.புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com