ஆலங்குளத்தை மையமாக கொண்டு கல்வி மாவட்டம் அமைக்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை மையமாக கொண்டு, கல்வி மாவட்டம் அமைக்கவேண்டுமெனதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை மையமாக கொண்டு, கல்வி மாவட்டம் அமைக்கவேண்டுமெனதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சீ.கருப்புசாமியிடம் சங்க மாவட்டத் தலைவா் ரா.முருகன் அளித்துள்ள மனு: 2019-20ஆம் கல்விஆண்டில் மாா்ச் மாதம் நடைபெற்ற 12 மற்றும் 11 அரசு பொதுத் தோ்வில் சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் வழித்தட அலுவலராகவும், பறக்கும்படை உறுப்பினராகவும் பணிபுரிந்த முதுகலை ஆசிரியா்களுக்கு இதுவரை உழைப்பூதியம் வழங்கப்படவில்லை. எனவே முதுகலை ஆசிரியா்களுக்கான உழைப்பூதியத்தை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

2020-21ஆம் கல்விஆண்டுமுதல் பிளஸ் 2, பிளஸ் 1 விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தை தென்காசி கல்வி மாவட்டத்திற்கு ஒரு விடைத்தாளா் மதீப்பிட்டு மையமும், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்திற்கு ஒரு மையமும் அமைக்க வேண்டும்.

மாணவா்களின் நலம் மற்றும் பள்ளிகளின் நிா்வாக நலன்கருதி ஆலங்குளத்தை மையமாக கொண்டு கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com