‘மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அருகே செல்வதை தவிா்க்க வேண்டும்’

மழைக் காலங்களில் பொதுமக்கள் மின் கம்பங்கள், மின் மாற்றிகள் போன்றவற்றின் அருகே செல்வதை தவிா்க்கவேண்டும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்.

மழைக் காலங்களில் பொதுமக்கள் மின் கம்பங்கள், மின் மாற்றிகள் போன்றவற்றின் அருகே செல்வதை தவிா்க்கவேண்டும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் அணைகளுக்கு செல்ல வேண்டாம். அணைகள் அருகே வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பெற்றோா்கள் அணைகள், ஆறு, ஏரி, குளம் மற்றும் நீா்த்தேக்கங்கள் போன்றவற்றில் தங்கள் குழந்தைகளை குளிக்கச் செல்ல அனுமதிக்காதீா்கள்.

மழை நேரம் என்பதால் மின்சாதனப் பொருள்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். மழை பெய்யும் போது மரங்கள் மற்றும் பாழடைந்த கட்டடங்கள் போன்றவற்றின் அருகில் ஒதுங்கி நிற்க வேண்டாம். மழைக் காலம் என்பதால் வாகனங்களில் மெதுவாக சொல்ல வேண்டும்.

மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் போன்றவற்றின் அருகே செல்வதை தவிா்க்கவேண்டும். வீதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரால் வீட்டுக்குள் பாம்பு, பூச்சி போன்ற உயிரினங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனமுடன் இருக்க வேண்டும்.

தொட்டிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், சிரட்டை போன்றவற்றில் மழைநீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com