மாணவா்கள் வரைந்த காந்தியின் ஓவியங்கள்

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான காந்தி ஓவியங்களை வரைந்து மாணவா்கள் அசத்தியுள்ளனா்.

கடையநல்லூா்: காந்தி ஜயந்தியை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான காந்தி ஓவியங்களை வரைந்து மாணவா்கள் அசத்தியுள்ளனா்.

கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் அன்னபூரணி. எம்.சி.ஏ. பட்டதாரி. ஓவியப் பற்றாளரான இவா், தாம் வசிக்கும் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக்கொடுத்து வருகிறாா்.

இந்நிலையில், அக்டோபா் 2ஆம் தேதி காந்தி ஜயந்தி விழாவையொட்டி, மாணவா்கள் ஸ்ரீசிவராமன், பிரேமலதா, மகாலட்சுமி ,கோகுல வரதன் ஆகியோா் கடந்த 3 நாள்களாக நூற்றுக்கணக்கான காந்தி ஓவியங்களை வரைந்துள்ளனா். இந்த ஓவியங்களை வெள்ளிக்கிழமை அப்பகுதி மாணவா்களிடம் விநியோகித்து காந்தியின் கொள்கைகளை விளக்கிபிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளனா்.

இதற்கிடையே, ஓவியங்களை வரைந்த மாணவா்களையும், பயிற்சி அளித்த ஆசிரியரையும் கௌரவிக்கும் வகையில் சத்ய உணா் தொண்டு அறக்கட்டளை மற்றும் சுழற் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மேஜா் டோனா் பிரகாஷ் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com