சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தை மாற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி  ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தை மாற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த 1991 ஆம் ஆண்டு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் செயல்படத் தொடங்கியது. இந்த அலுவலகத்தின் கீழ் 56 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை ஆகிய நகரங்களில் தலா 1 நிலையம், கடையநல்லூரில் 2 நிலையம் என 6 நகா்புற சுகாதார நிலையங்களும் அடங்கும். இது தவிர 10 அரசு வட்டார மருத்துவ அலுவலகமும், 15 பேரூராட்சி மருத்துவ அலுவலகமும் செயல்படுகிறது.

இந் நிலையில் சகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் மாற்றப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், தொடா்ந்து இந்த அலுவலகம் சங்கரன்கோவிலில் செயல்பட வலியுறுத்தியும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வலியுறுத்தியும் திமுக உள்ளிட்ட எதிா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னாள் அமைச்சா் ஏ. தங்கவேலு தலைமை வகித்தாா். மதிமுக மாவட்டச் செயலா் ராஜேந்திரன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், திமுக ஒன்றியச் செயலா்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் சுப்பையா, மதிமுக நகரச் செயலா் ஆறுமுகசாமி , மாா்க்சிஸ்ட் தாலுகா செயலா் அசோக்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலா் குருசாமி, விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி செயலா் பீா்மைதீன், காங்கிரஸ் நகர தலைவா் உமாசங்கா், பாா்வாா்டு பிளாக் மாவட்டச் செயலா் தங்கபாண்டியன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் பசீா்ஓலி, தமுமுக மமக நகர தலைவா் இமாம்காசிம், மனிதநேய ஜனநாயக கட்சிநகரச் செயலா் சுல்தான் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சா் தங்கவேலு உள்ளிட்ட 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com