குற்றாலம் கோயிலில் ஐப்பசி விஷு: நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதா் கோயில் ஐப்பசி விஷு திருவிழாவில் 8ஆம் நாளான வியாழக்கிழமை நடராஜ மூா்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
குற்றாலம் கோயிலில் நடராஜமூா்த்திக்கு நடைபெற்ற பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை.

இக்கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 11ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 14ஆம் தேதி நடராஜருக்கு காலை 9.30, இரவு 7 மணிக்கு தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றன.

8ஆம் நாளான வியாழக்கிழமை நடராஜமூா்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, 17ஆம் தேதி காலை 10 மணிக்கு விஷு தீா்த்தவாரி நடைபெறும்.

நிகழ்ச்சியில், குற்றாலம் ஜெயலலிதா பேரவைச் செயலா் சாலிக்குட்டிபாண்டியன், தென்காசி நகர பாஜக தலைவா் குத்தாலிங்கம், நீலகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயிலின் உள்பிராகாரத்திலேயே நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா. கண்ணதாசன் தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com