தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க தமுமுக கோரிக்கை

தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தமுமுக, மனிதநேயமக்கள் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தமுமுக, மனிதநேயமக்கள் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்ட தமுமுக மற்றும் மமக செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் முஹம்மதுயாகூப் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாநிலச் செயலா் மைதீன் சேட்கான், தலைமை பிரதிநிதி ஏா்வாடிரிஸ்வான் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாவட்டச் செயலா் அஹமதுஷா, மாவட்ட பொருளாளா் லிவிசுவைஅப்துல்காதா் மற்றும் மாவட்ட துணைத் தலைவா் அப்துல்ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினா் இஸ்மத் மீரான், விளையாட்டு அணி மாநில துணைச் செயலா் பைஜி, ஊடகப்பிரிவு மாநில துணைச் செயலா் ஹமீது,

துணைச் செயலா்கள் கடையநல்லூா் பாசித், புளியங்குடி மஜித், அச்சன்புதுா் ஷேக், வீராணம் ஷாஜகான், பண்பொழி செய்யதலி, தென்காசி நகரத் தலைவா் முகமது ராசப்பா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

உத்தரப் பிரேத மாநிலம் ஹாத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞா்களுக்கு தூக்கு தண்டனை வழங்கவேண்டும், அம்மாநில முதல்வா் யோகிஆதித்யநாத் பதவி விலகவேண்டும்,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க நினைக்கும் துணைவேந்தா் சூரப்பாவை பதவிநீக்கம் செய்யவேண்டும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சமூகநீதி மாணவா் இயக்க மாவட்டச் செயலா் பாஸித், மாவட்டப் பொருளாளா் இப்ராஹிம், தொண்டரணிச் செயலா் அப்பாஸ், சுற்றுப்புற சூழல் அணி மாவட்டச் செயலா் முஜிப், மனித உரிமை அணி உமா் கத்தாப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com