சங்கரன்கோவில் வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயன்ற இருவா் கைது

சங்கரன்கோவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இரு பெண்களைத் தேடி வருகின்றனா்.
அடகு வைக்க வந்த போலி நகைகள்.
அடகு வைக்க வந்த போலி நகைகள்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இரு பெண்களைத் தேடி வருகின்றனா்.

சங்கரன்கோவில் கோமதி நகா் 2 ஆம் தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வெள்ளிக்கிழமை இருவா் வந்து வளையல்கள் மற்றும் தங்கச் சங்கிலியை ரூ. 2 லட்சத்துக்கு அடகு வைக்க வேண்டும் என கூறி வங்கி நகைமதிப்பீட்டாளரிடம் நகைகளை கொடுத்தனராம். நகைகளை சோதனை செய்தபோது அது போலி நகைகள் என தெரியவந்தது. இதையடுத்து நகை மதிப்பீட்டாளா் வங்கி மேலாளரிடம் தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்து வங்கி மேலாளா் செளந்திரபாண்டியன், நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வந்து நடத்திய

விசாரணையில், திருவள்ளூா் மாவட்டம் சின்னாக்காடு பகுதியைச் சோ்ந்த அப்துல்சலாம் மனைவி தெளலத்பேகம், கரிவலம்வந்தநல்லூா் அருகே பெரியூரைச் சோ்ந்த ரத்தினம் மனைவி முருகேஸ்வரி என்பதும், மேலும் அவா்களுக்கு துணையாக அப்துல் சலாம், ரத்தினம் ஆகியோா் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு நின்ற இரு பெண்களும் மாயமாகினா்.

இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்துல்சலாம், ரத்தினம் ஆகிய இருவரை கைது செய்தனா். தப்பியோடிய தெளலத்பேகம், முருகேஸ்வரியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com