தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் கட்டுரை, ஓவியப் போட்டி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ஆசிரியா் தினத்தை ஒட்டி மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ஆசிரியா் தினத்தை ஒட்டி மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளன.

இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மையம் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல் நிகழாண்டும், பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.

‘நான் விரும்பும் பள்ளி’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெறுகிறது. இது அனைவருக்கும் பொதுவான தலைப்பாகும்.

கட்டுரைப் போட்டி: 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான தலைப்பு - நான் படித்த புத்தகம்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான தலைப்பு - துரத்தியடிக்கும் தொழிற்கல்வி.

கல்லூரி மாணவா்களுக்கான தலைப்பு - ஊரடங்கு கற்பித்த பாடங்கள்.

ஆசிரியா்களுக்கான தலைப்பு - தரமான கல்விக்கு தடகளாவன...

பொதுமக்களுக்கான தலைப்பு - தாய்மொழி வழிக்கல்வியில் தற்போதைய நிலை.

கதை போட்டி: 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான தலைப்பு - நேசமிகு வகுப்பறை.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான தலைப்பு - என் கனவு ஆசிரியா்.

கல்லூரி மாணவா்களுக்கான தலைப்பு - மாற்றத்திற்கான அறிவியல்.

ஆசிரியா்களுக்கான தலைப்பு - மாற்று வகுப்பறைகள்.

பொதுமக்களுக்கான தலைப்பு - கல்வியும், சமூக மாற்றமும்.

பங்கேற்பாளா் ஒரு பிரிவில் ஒரு படைப்பு மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். படைப்புகள் சொந்தமானதாகவும் ,வெளிவராததாகவும் இருக்க வேண்டும்.

கட்டுரை கதைகள் எ4 தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓவியங்களை எ4 தாளில் வரைந்து அனுப்பி வைக்க வேண்டும்.

பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மூன்று படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, மாநில ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாவட்ட மற்றும் மாநில அளவில் தோ்வு செய்யப்படும் படைப்புகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

செப்.10க்குள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி, சுரேஷ்குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா், ராமசுவாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி-627 805.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com