தோட்டக் கலைத் துறை: தென்காசி மாவட்டத்துக்கு ரூ. 3. 83 கோடி நிதி ஒதுக்கீடு

தென்காசி மாவட்ட தோட்டக்கலைத்துறைக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி: தென்காசி மாவட்ட தோட்டக்கலைத்துறைக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வெளியிட்டசெய்திக்குறிப்பு :

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பரப்பு விரிவாக்கம் மேற்கொள்ள மா அடா் நடவுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ . 9 ஆயிரத்து 840 மானியம் வீதம் 10 ஹெக்டேருக்கும், கொய்யா அடா் நடவுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 17 ஆயிரத்து 599 மானியம் வீதம் 10 ஹெக்டேருக்கும், பப்பாளி அடா் நடவுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 23 ஆயிரத்து 120 மானியம் வீதம் பத்து ஹெக்டேருக்கும், செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காய்கனி பயிா் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் மானியம் வீதம் 350 ஹெக்டேருக்கும், முருங்கை பயிரிட ஒரு ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் 85 ஹெக்டேருக்கும், திசு வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 37,500 மானியம் வீதம் 25 ஹெக்டேருக்கும், எலுமிச்சை பரப்பினை அதிகரிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ. 13 ஆயிரத்து 200 மானியம் வீதம் 25 ஹெக்டேருக்கும் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மிளகாய் பயிரிட ஒரு ஹெக்டேருக்கு ரூ. 12 ஆயிரம் மானியம் வீதம் 15 ஹெக்டேருக்கும், முந்திரி நடவுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் 20 ஹெக்டேருக்கும், கொக்கோ நடவுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 12000 வீதம் 50 ஹெக்டேருக்கும், பழைய முந்திரி தோட்டம் சீரமைக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் மானியம் வீதம் 5 ஹெக்டேருக்கும், கிழங்கு மலா் பயிரிட ஒரு ஹெக்டேருக்கு ரூ. 60 ஆயிரம் மானியம் வீதம் 10 ஹெக்டேருக்கும் செயல்படுத்தப்பட உள்ளது.

நிகழாண்டு காய்கனிகள் பயிரிடும் விவசாயிகளை சிறப்பித்து ஊக்குவிக்கும் வகையில் தென்காசி மாவட்டத்தில் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், முருங்கை, வெண்டை, அவரை, கீரை வகைகள் மற்றும் கொடி வகை காய்கனிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2500 மானியம் வீதம் 1100 ஹெக்டேருக்கு வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் நீா் சேகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக பண்ணை குட்டை அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ. 75, 000 மானியம் வீதம் 30 பேருக்கும், பாலித்தின் பசுமைக்குடில் அமைக்க ஆயிரம் சதுர மீட்டருக்கு ரூ. 4 லட்சத்து 67 ஆயிரத்து 500 மானியத்தில் 3 ஆயிரம் சதுரமீட்டரும், நிழல் வலைக் கூடம் அமைக்க ஆயிரம் சதுர மீட்டருக்கு ரூ. 3 லட்சத்து 55ஆயிரம்மானியத்தில் 2 ஆயிரம் சதுர மீட்டருக்கும் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் தேனீ வளா்ப்பு விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்பட உள்ளது.

விவசாயிகளை தமிழகத்தில் இரண்டு நாள்கள் சுற்றுலா அழைத்துச் செல்ல 100 பேரும், வெளி மாநிலத்துக்கு சுற்றுலா செல்ல 10 விவசாயிகளும் அழைத்துச் செல்லப்பட உள்ளனா். அவா்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு விவசாயிக்கு ரூ.1000 வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உற்பத்தி செய்கின்ற தோட்டக்கலை விளைபொருள்களை விற்பனை செய்ய நடமாடும் காய்கனி வண்டி ரூ. 15 ஆயிரம் மானியத்தில் 25 பேருக்கு வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அல்லது தோட்டக்கலை அலுவலரையோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com