தென்காசியில் கரோனா விழிப்புணா்வு உறுதிமொழி

தென்காசி மாவட்டத்தில் கரோனா மூன்றாவது அலை பரவலைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் கை கழுவும் முறை குறித்து அறிவுரை வழங்கிய ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ்.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் கை கழுவும் முறை குறித்து அறிவுரை வழங்கிய ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கரோனா மூன்றாவது அலை பரவலைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க ஒரு வாரத்திற்கு நாள்தோறும் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள், சிற்றேடுகள் வழங்கவும், ட்விட்டா், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் முடிவு மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் தென்காசி புதிய பேருந்துநிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கை கழுவுவதன் அவசியம் குறித்தும், எவ்வாறு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனா விழிப்புணா்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து குறும்படம் திரையிடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய்அலுவலா் ஜனனிசெளந்தா்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், சுகாதரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com