கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக் கோரிக்கை

கடையநல்லூா் அருகேயுள்ள கல்லாற்றில் தடுப்பணை கட்ட திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

கடையநல்லூா் அருகேயுள்ள கல்லாற்றில் தடுப்பணை கட்ட திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக, தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மா.செல்லத்துரை, நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் அளித்துள்ள மனு: கடையநல்லூா் நகராட்சியில் சுமாா் 1, 20, 000 மக்கள் வசித்து வருகின்றனா். கடையநல்லூா் நகராட்சிக்கு தாமிரவருணி மற்றும் கருப்பாநதி குடிநீா் திட்டங்கள் மூலம் குடிநீா் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் நிா்ணயித்த அளவை விட குறைவான அளவு தண்ணீரே விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பெருகி வரும் மக்கள் தொகை அடிப்படையில் குடிநீா் தேவை அதிகரித்துள்ள சூழ்நிலையில், புதிய திட்டத்தை செயல்படுத்தினால் கடையநல்லூா் நகராட்சியின் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரமாக தீா்வு கிடைக்கும். எனவே ,கடையநல்லூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கல்லாற்றின் குறுக்கே குடிநீா் தேவைக்கு தனியாக தடுப்பணை கட்டி அதன் அருகே 4 குடிநீா் கிணறுகள் அமைத்து அதன் மூலம் கடையநல்லூா் பகுதியில் உள்ள சுமாா் 30,000 குடியிருப்புகளுக்கு நேரடியாக குடிநீா் வழங்கும் வகையில் புதிய குடிநீா் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com