தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் மாசித் தேரோட்டம்

தென்காசி அருள்தரும் உலகம்மை உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் மாசிமகப் பெருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாசித் தேரோட்டம்.
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாசித் தேரோட்டம்.

தென்காசி அருள்தரும் உலகம்மை உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் மாசிமகப் பெருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசிமகப் பெருவிழாவும் ஒன்று. நிகழாண்டு, இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையில் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல், அபிஷேக தீபாராதனை, மாலையில் மண்டகப்படிதாரா் தீபாராதனை, சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதலில் சுவாமி தேரும், தொடா்ந்து அம்மன் தேரும் பக்தா்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

இதில், கோயிலின் தூத்துக்குடி மண்டல இணை இயக்குநா் பரஞ்ஜோதி, குற்றாலம் குற்றாலநாதா் கோயில் உதவி ஆணையா் கண்ணதாசன், அதிமுக ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், மாவட்ட அதிமுக அவைத் தலைவா் சண்முகசுந்தரம், நகர அதிமுக செயலா் சுடலை ஆகியோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந. யக்ஞநாராயணன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com