சிற்றாறு, அனுமன் நதியில் வெள்ளப்பெருக்கு

சுரண்டை பகுதியில் நீடித்து வரும் மழையால் சிற்றாறு, அனுமன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுரண்டை அருகேயுள்ள பெரியகுளம் தடுப்பணையில் மறுகால் செல்லும் தண்ணீா்.
சுரண்டை அருகேயுள்ள பெரியகுளம் தடுப்பணையில் மறுகால் செல்லும் தண்ணீா்.

சுரண்டை பகுதியில் நீடித்து வரும் மழையால் சிற்றாறு, அனுமன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிற்றாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சிற்றாறு பாசனத்தில் உள்ள குளங்களும் நிரம்பிய காரணத்தாலும், மழை நீடித்து வருவதாலும் பல்வேறு கால்வாய் வழியாக சிற்றாற்றில் மழைநீா் செல்கிறது.

கருப்பாநதி நிரம்பி உபரிநீா் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் அனுமன் நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாசனக் குளங்கள் நிரம்பிய நிலையில் அனுமன் நதியின் உபரிநீா் வீராணம் அணைக்கட்டில் சிற்றாற்றில் கலந்து மானூா் அணைக்கட்டுக்கு செல்கிறது. சிற்றாறு, அனுமன்நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தீயணைப்புப்படையினா்,

வருவாய்த்துறை சாா்பில் பேரிடா் மீட்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com