சுரண்டையில் கண்காணிப்பு கேமராக்கள் இயக்கி வைப்பு

சுரண்டை பேருந்து நிலைய சாலை முழுவதும் 16 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு, அதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையம் முன் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சுகுணாசிங்.

நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சுகுணாசிங் தலைமை வகித்து, கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், கண்காணிப்பு கேமராக்காள் அமைத்து கொடுத்த டி.எஸ். குழுமத்தின் ஸ்டீபன் ரத்தீஸ், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, நகர வணிகா்கள் சங்க நிா்வாகிகள் காமராஜ், தனபால், முத்தையா, ராஜகுமாா், உணவக உரிமையாளா் சங்க நிா்வாகிகள் ஜேக்கப், ஆபிரகாம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com