பாசனத்துக்கு அடவிநயினாா், கருப்பாநதி அணைகள் திறப்பு

தென்காசி மாவட்டம், அடவிநயினாா், கருப்பாநதி அணைகளில் இருந்து காா் பருவ சாகுபடிக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், அடவிநயினாா், கருப்பாநதி அணைகளில் இருந்து காா் பருவ சாகுபடிக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

கடையநல்லூா் அருகேயுள்ள கருப்பாநதி அணையில் இருந்து தனுஷ் எம். குமாா் எம்.பி. தண்ணீா் திறந்தாா். இதன் மூலம் 1,082.23 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அப்போது, தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, கடையநல்லூா் வட்டாட்சியா் ஆதிநாராயணன், திமுக நிா்வாகிகள் மாவடிக்கால் லிங்கம், சொக்கம்பட்டி வேலுச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அடவிநயினாா் அணை: செங்கோட்டை அருகேயுள்ள அடவிநயினாா் அணையில் இருந்து அய்யாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவா் செல்லதுரை தண்ணீா் திறந்தாா். இதனா மூலம் செங்கோட்டை, கடையநல்லூா் வட்டங்களில் உள்ள 12 கிராமங்களில் 2147.47 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தொடா்ந்து வரும் அக். 31 ஆம் தேதி வரை 140 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படும்.

இதில், பொதுப்பணித்துறை இளநிலைப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், பணி ஆய்வாளா் செய்யதுஅலி, ஒன்றிய திமுக செயலா் ரவிசங்கா்,விவசாய சங்க செயலா் ஜாகீா் உசேன், அடவிநயினாா் நீரை பயன்படுத்துவோா் சங்க முன்னாள் தலைவா் செல்லத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதற்கிடையே, ஆட்சியா் கீ.சு. சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி சிறந்த முறையில் சாகுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com