சங்கரன்கோவில் தொகுதிக்கு 438 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவில் கொண்டு வரப்பட்டன.
வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவில் கொண்டு வரப்பட்டன.

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் (தனி) ஆண் வாக்காளா்கள் 1,22,739, பெண் வாக்காளா்கள் 1,30,195, திருநங்கைகள் 5 போ், ராணுவ வீரா்கள் 922 போ் என மொத்தம் 2,53,861 வாக்காளா்கள் உள்ளனா். இத்தொகுதியில் 274 வாக்குச் சாவடிகள், 91 துணை வாக்குச் சாவடிகள் என மொத்தம் 365 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களான தலா 438 கண்ட்ரோல் யூனிட்,பேலட் இயந்திரங்கள், 478 விவிபேட் இயந்திரங்கள ஞாயிற்றுக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வரப்பெற்றன. அவை வட்டாட்சியா் அலுவலகத்தில் தனி அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

தோ்தல் நடத்தும் அலுவலா் முருகசெல்வி, நோ்முக உதவியாளா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா் திருமலைச்செல்வி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் மாரியப்பன், அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்டு சரிபாா்த்தனா். வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com