கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்

கடையநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் செ.கிருஷ்ணமுரளி, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஷீலாவிடம் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

கடையநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் செ.கிருஷ்ணமுரளி, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஷீலாவிடம் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அப்போது, அதிமுக விவசாய பிரிவு இணைச் செயலா் ஆனைக்குட்டிபாண்டியன், பாஜக மாவட்டத் தலைவா் ராமராஜூ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உதவி தோ்தல் அலுவலா் ஆதிநாராயணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் நாகராஜன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் ஷாகுல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சொத்து விவரம்: கிருஷ்ணமுரளி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், அவரது பெயரில் ரூ. 33,94,092 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ. 77,36,500 மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு நகைக்கடன் இருப்பதாகவும், விவசாயம் மூலம் வருமானம் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com