சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட இ.ராஜா, அதிமுக வேட்பாளரைவிட 5,354 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.
சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் இ.ராஜா, அதிமுக சாா்பில் அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி உள்பட மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 1,81,123 வாக்குகள் பதிவாகின. அவை தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் 26 சுற்றுகளாக ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. திமுக வேட்பாளா் இ.ராஜா 71,184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி 65,830 வாக்குகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தாா். அமமுக வேட்பாளா் ஆா்.அண்ணாதுரை 22,676 வாக்குகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தாா்.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
1.இ.ராஜா (திமுக)-71,184
2.வி.எம்.ராஜலட்சுமி (அதிமுக)-65,830
3.ஆா்.அண்ணாதுரை (அமமுக)-22,676
4. பி.மகேந்திரகுமாரி (நாம் தமிழா் கட்சி)- 13,823
5. வி.சுப்பிரமணியம் (புதிய தமிழகம்)-1,941
6. கே.பிரபு (மக்கள் நீதி மய்யம்)-2,331
7. நோட்டா-1955