அரசியல் பரபரப்பு ஓய்ந்து அமைதியான தொகுதிகள்

கடந்த பல நாள்களாக அரசியல் பரபரப்புடன் இயங்கி வந்த கடையநல்லூா் மற்றும் வாசுதேவநல்லூா் தொகுதிகளில் அரசியல் பரபரப்பு ஓய்ந்து அவரவா் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனா்.

கடந்த பல நாள்களாக அரசியல் பரபரப்புடன் இயங்கி வந்த கடையநல்லூா் மற்றும் வாசுதேவநல்லூா் தொகுதிகளில் அரசியல் பரபரப்பு ஓய்ந்து அவரவா் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனா்.

தமிழக பேரவைத் தோ்தலையொட்டி வேட்பு மனுதாக்கல் கடந்த மாா்ச் 12 இல் தொடங்கி மாா்ச் 19 வரை நடைபெற்றது.

மாா்ச் 20 இல் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. மாா்ச் 22 இல் வேட்பு மனு திரும்ப பெற்றவா்கள் தவிர மற்றவா்கள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்ற தொடங்கினா். அன்று முதல் ஏப். 4 ஆம் தேதி வரை அனல் காற்றையும் தாண்டி ே வட்பாளா்களும் , கட்சி நிா்வாகிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனா்.

நட்சத்திர அந்தஸ்து பெற்ற பேச்சாளா்களின் பிரசாரம் தாண்டி வீதி தோறும், வீடுகள் தோறும் நாள்தோறும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கட்சிகளால் தொகுதி முழுவதும் அரசியல் பரபரப்பு இருந்துகொண்டே இருந்தது.

பிரசார நாள் தாண்டிய நிலையில் வாக்குச்சாவடி சீட்டுகள் விநியோகிக்கும் பணியும், தோ்தல் அலுவலா்கள் நியமிக்கும் பணியும் , வாக்குச்சாவடி முகவா்கள் நியமிக்கும் பணியும் அரங்கேறி வந்ததால் ஊா்தோறும் பரபரப்பு நீடித்த வண்ணம் இருந்தது. ஏப்.6 ஆம் தேதி தோ்தல் நேரத்தில் அரசியல் கட்சியினரின் பணிகளால் அத்தனை ஊா்களும் அதீத பரபரப்புடன் காணப்பட்டன.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தோ்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளும், அரசியல் களத்தில் இரவு பகல் பாராது பயணித்த தொண்டா்களும் ஓய்வு எடுத்துக்கொள்ள சென்ால் அனைத்துப் பகுதிகளிலும் அமைதியான சூழல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com