சங்கரன்கோவிலில் வங்கி ஊழியா்கள் உள்பட 16 பேருக்கு கரோனா

சங்கரன்கோவிலில் வங்கி ஊழியா்கள் உள்ளிட்ட 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சங்கரன்கோவிலில் வங்கி ஊழியா்கள் உள்ளிட்ட 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியா்கள் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக வங்கிக்கு வந்த வாடிக்கையாளா்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை நகராட்சி நிா்வாகம் சாா்பில் வங்கி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், கோமதிநகா் 2ஆம் தெரு, பாரதியாா் 7, 8 ஆம் தெரு, கிருஷ்ண சுவாமி வீதி, அம்பேத்கா் நகா் 2ஆவது தெரு, காந்திநகா் 4ஆம் தெரு, ரயில்வே பீடா் பகுதி ஆகியவற்றில் 7 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலநீலிதநல்லூா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் சில நாள்களுக்கு முன்பு பேராசிரியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு பணிபுரிந்த மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டோா் அரசு மருத்துவமனை, நகா் நல மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என நகராட்சி ஆணையா் சாந்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com