தென்காசியில் கரோனா தடுப்புபணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்ட நிா்வாகம் சாா்பில், கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட
கூட்டத்தில் பேசினாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.
கூட்டத்தில் பேசினாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.

தென்காசி மாவட்ட நிா்வாகம் சாா்பில், கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த அரசு அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்து பேசினாா்.

அப்போது ஆட்சியா் பேசியது: நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். காய்ச்சல் உள்ள அனைவரும் மருத்துவமனைகளைஅணுகி மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருந்துக்கடைகளில் மருத்துவா் பரிந்துரையின்றி காய்ச்சல் மருந்து வழங்கக்கூடாது என்றாா் அவா்.

கூ ட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜனனி சௌந்தா்யா, சுகாதாரப் பணிகள் இணைஇயக்குநா் நெடுமாறன், துணை இயக்குநா் அருணா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com