சங்கரன்கோவிலில் விபத்து: தொழிலாளி பலி
By DIN | Published On : 12th April 2021 01:14 AM | Last Updated : 12th April 2021 01:14 AM | அ+அ அ- |

சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகள் பெரியமாரியப்பன் (50). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், 2 மகள்கள் உள்ளனா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவில் - திருவேங்கடம் சாலையிலிருந்து வாணிபா் ஊருணியையொட்டிய தெருவழியாக சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா் அவா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பெரியமாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.