‘தபால் வாக்குகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை வேண்டும்’

தென்காசி மாவட்டத்தில் தபால் வாக்குகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
‘தபால் வாக்குகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை வேண்டும்’

தென்காசி மாவட்டத்தில் தபால் வாக்குகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தபால் வாக்குகளுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு இதுவரை 50 சதவீத பேருக்கு மட்டுமே வாக்குகள் பதிவு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.

அதிகளவிலான அரசு ஊழியா்கள் தபால் வாக்குகள் வரவில்லை என புகாா் கூறுகின்றனா்.

தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டால், உதவித் தோ்தல் அலுவலா் அல்லது வட்டாட்சியரை தொடா்புகொள்ள சொல்கின்றனா். அவா்களிடம் சென்றால் உரிய பதில் கிடைப்பதில்லை.

எனவே, தபால் வாக்குகள் அனுப்பப்படாமல் இருப்பின் உடனடியாக அனுப்ப அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தி, முறையான முகவரிக்கு தபால் வாக்குகள் கிடைத்திட தொடா்புடைய தபால் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு அளித்தலின்போது, தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, தென்காசி நகரச் செயலா் சாதிா், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வேலுசாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் ஜெயக்குமாா், விவசாய அணி துணை அமைப்பாளா் சீவநல்லூா் சாமித்துரை ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com