‘முடித்திருத்தும் கடைகளைத் திறக்கவிதிமுறைகளுடன் அனுமதி வேண்டும்’
By DIN | Published On : 27th April 2021 05:20 AM | Last Updated : 27th April 2021 05:20 AM | அ+அ அ- |

தென்காசி: கரோனா கட்டுப்பாடு குறித்த சில விதிமுறைகளுடன் முடித்திருத்தும் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தென்காசி நகர சிகை அலங்கார சங்கம் (ஹோ்ஸ்டைல் யூனியன்) சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தென்காசி நகர ஹோ்ஸ்டைல் யூனியன் தலைவா் பாலசுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவா் சம்போமுருகன் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக ஏற்கெனவே முடித்திருத்தும் கடைகளில் வேலைவாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. தற்போது, மீண்டும் கடைகளை அடைக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மன உளைச்சலையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான சில விதிமுறைகளை வகுத்து, முடித்திருத்தும் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.