கரோனா: சங்கரன்கோவிலில் 3 ஜவுளிக் கடைகள் மூடல்
By DIN | Published On : 30th April 2021 06:35 AM | Last Updated : 30th April 2021 06:35 AM | அ+அ அ- |

மூடப்பட்ட ஜவுளிக் கடை.
சங்கரன்கோவிலில் கரோனா தொற்று பரவல் காரணமாக 3 பெரிய ஜவுளிக் கடைகள் வியாழக்கிழமைமுதல் மூடப்பட்டன.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேலும் உள்ள வணிக நிறுவனங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் சங்கரன்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகேயுள்ள 2 பெரிய ஜவுளிக் கடைகள் மற்றும் திருவேங்கடம் சாலையில் உள்ள ஜவுளிக் கடை என 3 பெரிய ஜவுளிக் கடைகளை மூட நகராட்சி ஆணையா் சாந்தி உத்தரவிட்டாா். இதையடுத்து அந்தக் கடைகள் அனைத்தும் வியாழக்கிழமைமுதல் மூடப்பட்டுள்ளன.