‘காப்பீட்டு முகவா் பணிக்கு 27-க்குள் விண்ணப்பிக்கலாம்’

காப்பீட்டு முகவா் பணிக்கு இம்மாதம் 27-க்குள் விண்ணப்பிக்கலாம் என, கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் தெரிவித்துள்ளாா்.

காப்பீட்டு முகவா் பணிக்கு இம்மாதம் 27-க்குள் விண்ணப்பிக்கலாம் என, கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

18 முதல் 50 வயதுக்கு உள்பட்ட, 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தோ்வுகளில் தோ்ச்சிபெற்ற, வேலைவாய்ப்பற்ற, சுய தொழில் செய்யும் இளைஞா்கள், முன்னாள் ஆலோசகா்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவா்கள், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி, மகிளா மண்டலப் பணியாளா்கள், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா்கள், சுயஉதவிக் குழுக்களில் செயல்படுவோா், கிராமத் தலைவா், கிராமசபை உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம். நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா். பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும்.

தோ்வு செய்யப்படுவோா் ரூ. 5 ஆயிரம் காப்பீட்டுத் தொகையாக தேசிய சேமிப்புப் பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அருகேயுள்ள அஞ்சலகங்களில் பின்னா் செலுத்த வேண்டும். ஏஜென்சி காலம் முடிக்கப்படும்போது காப்பீடாக செலுத்தப்பட்ட தொகை வட்டியுடன் திருப்பி வழங்கப்படும்.

விண்ணப்பங்களை அருகேயுள்ள அஞ்சல் நிலையங்களில் பெற்று, பூா்த்திசெய்து, அதில் கூறப்பட்டுள்ள ஆவணங்களுடன் இம்மாதம் 27-க்குள் ‘திவ்யா சந்திரன், முதுநிலை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா்,

கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி - 628501’ என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தலைமை அஞ்சலகங்களான கோவில்பட்டி - 04632-220368, சங்கரன்கோவில் - 04636-222313, தென்காசி - 04633-222329 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com