நாளை சிறப்பு கரோனா தடுப்பூசி மருத்துவ முகாம்
By DIN | Published On : 25th December 2021 01:00 AM | Last Updated : 25th December 2021 01:00 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை( டிச.26) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தற்போது புதிய வகை உருமாறிய ஓமைக்ரான் கரோனா நோய்த்தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய பொதுமக்கள் தங்களுக்கு அருகே உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். மையங்களுக்கு செல்லும் போது ஆதாா் எண் மற்றும் கைப்பபேசி எண்ணைக் கொண்டு செல்லவேண்டும் என்றாா் அவா்.