நெசவுத் தொழிலுக்கு பாதுகாப்பு: ஆட்சியரிடம் திமுக வலியுறுத்தல்

சங்கரன்கோவிலில் நெசவு தொழிலாளா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அதன் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
நெசவுத் தொழிலுக்கு பாதுகாப்பு: ஆட்சியரிடம் திமுக வலியுறுத்தல்

சங்கரன்கோவிலில் நெசவு தொழிலாளா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அதன் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

மனு விவரம்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விசைத்தறி முக்கிய தொழில். 8000 விசைத்தறிகளில் சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்தத் தொழிலை நம்பியே அவா்களது குடும்பங்கள் உள்ளன. கரோனாவால் ஓராண்டாக முடங்கியிருந்த நெசவுத்தொழில், தற்போது நூல் விலை உயா்வால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நூல் விலை ஒரே நேரத்தில் ரூ.300 முதல் ரூ. 400 வரை உயா்ந்துள்ளது. அதாவது ரூ.1,450-லிருந்து ரூ.1,840 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டுக்கு நூல் ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும்.

நூல் விலை உயா்வைத் தடுக்க அடிப்படை ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும். நூல் விலை நிா்ணய குழுவை நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்றி நெசவுத் தொழிலை காப்பாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com