கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் ஜலாலுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அப்துல்பாஸித், மாவட்டப் பொருளாளா் சையதுமசூது, மாவட்ட துணைத் தலைவா் அப்துல்காதா், மாவட்ட துணைச் செயலா்கள் காஜாமைதீன், புகாரி அப்துல்சலாம், மாணவரணிச் செயலா் அலாவுதீன், மருத்துவரணிச் செயலா் யாசா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் முஹம்மது , மாநிலச் செயலா்கள் பைசல், இப்ராஹிம், மேலாண்மைக் குழு உறுப்பினா் அப்துல் நாசா் , முஹம்மது தாஹா ஆகியோா் பேசினா்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இஸ்லாமியா்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும். கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டும். கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருநெல்வேலி- தென்காசி நெடுஞ்சாலையை போா்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com