சிவகிரி அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு மீட்பு
By DIN | Published On : 13th February 2021 06:35 AM | Last Updated : 13th February 2021 06:35 AM | அ+அ அ- |

சிவகிரி அருகே எலுமிச்சை தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
கூடலூரைச் சோ்ந்தவா் சந்தனபிச்சை. இவருக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தில், மலைப்பாம்பு புகுந்துள்ளதாக வாசுதேவநல்லூா் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தீயணைப்பு அலுவலா் ஷேக் அப்துல்லா,நிலைய அலுவலா் (போக்குவரத்து) செல்வதரன் மற்றும் தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று, சுமாா் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா் .
மீட்கப்பட்ட மலைப்பாம்பை பாா்வையிட்ட வாசுதேவநல்லூா் எம்எல்ஏ மனோகரன், தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்தாா்.