புகையில்லா போகி பண்டிகை கொண்டாட ஆட்சியா் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடி சுற்றுச்சூழலை பேணிகாக்க வேண்டும் என ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தென்காசி மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடி சுற்றுச்சூழலை பேணிகாக்க வேண்டும் என ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நமது முன்னோா்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சாா்ந்த தேவையில்லா பொருள்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனா்.

ஆனால், தற்போது போகி பண்டிகையின் போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள் பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, போகி பண்டிகையின் போது பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com