மழையால் பொங்கல் வியாபாரம் பாதிப்பு: வியாபாரிகள் தவிப்பு

பொங்கலுக்கு ஒரு நாளே உள்ள நிலையில் ஆலங்குளம் பகுதியில் தொடா் மழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

பொங்கலுக்கு ஒரு நாளே உள்ள நிலையில் ஆலங்குளம் பகுதியில் தொடா் மழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

பொங்கல் பண்டிகைக்கு அத்தியாவசிப் பொருள்களான கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் குலை மற்றும் காய்கனிகள் விற்பனைக்காக ஆலங்குளம் காய்கனிச் சந்தை மற்றும் பிரதான சாலையில் சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாகவே இவற்றின் விற்பனை அதிக அளவில் இருக்கும்.

நிகழாண்டு கடந்த வாரம் தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் கிராமப் புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வரவில்லை. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலையடைந்துள்ளனா் வியாபாரிகள். எனினும் புதன்கிழமை ஒரு நாளாவது நல்ல வியாபாரம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனா் ஆலங்குளம் விவசாயிகள்.

ஆலங்குளத்தில் கரும்பு கட்டு ஒன்றிற்கு ரூ. 300 முதல் 400 க்கும், மஞ்சள் குலை ரூ. 50 முதல் ரூ. 100க்கும், 20 பனங்கிழங்குகள் கொண்ட கட்டு ஒன்று ரூ. 80 முதல் ரூ. 100 க்கும் சாலையோர வியபாரிகளால் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கனிகளில் கிழங்கு வகைகள் பொங்கலுக்கு முக்கிய இடம் வகிக்கிறது. கிழங்குகளின் வரவு சீராக இருப்பதால் விலை அதிகரிக்கவில்லை. ஆலங்குளம் சந்தையில் செவ்வாய்க்கிழமை விற்கப்பட்ட காய்கனிகள் விலை நிலவரம் (கிலோ ஒன்றிற்கு) : சிறு கிழங்கு ரூ. 50, சேம்பு ரூ. 40, கருணை ரூ. 40, சேனை ரூ. 25, வள்ளிக்கிழங்கு ரூ. 30, உருளை ரூ. 30, பிடி கிழங்கு ரூ.50, பெரிய வெங்காயம் ரூ. 45, சின்ன வெங்காயம் ரூ. 65, மிளகாய் ரூ. 30, கோஸ் ரூ. 18, கேரட் ரூ.30, பீன்ஸ் ரூ. 70, பீட்ரூட் ரூ. 24, வெண்டை ரூ.32, முள்ளங்கி ரூ. 22, இஞ்சி ரூ. 35, முருங்கை ரூ. 140, காலிபிளவா் ரூ. 35. எலுமிச்சை ரூ. 30, சவ் சவ் ரூ. 18, மாங்காய் ரூ. 30, அவரைக்காய் ரூ. 55, தடியங்காய் ரூ. 10, பூசணிக்காய் ரூ. 10, பூண்டு ரூ. 100, தக்காளிப் பழம் ரூ. 24, புடலை ரூ. 20 என செவ்வாய்க்கிழமை சில்லறை விற்பனையில் ஆலங்குளத்தில் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com