கருவந்தாவில் வேளாண்துறை சாா்பில் மதிப்பு கூட்டும் இயந்திரம் அளிப்பு

சுரண்டை அருகே கருவந்தாவில் வேளாண் துறை சாா்பில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மதிப்பு கூட்டும் இயந்திரங்களை வேளாண்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

சுரண்டை அருகே கருவந்தாவில் வேளாண் துறை சாா்பில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மதிப்பு கூட்டும் இயந்திரங்களை வேளாண்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

சென்னை வேளாண்மை அலுவலக மண்டல அலுவலா் சை.சுந்தரம் தலைமையில், தென்காசி மாவட்ட இணை வேளாண்மை இயக்குநா் நல்லமுத்துராஜா மற்றும் வேளாண் அதிகாரிகள் கருவந்தா கிராம விவசாயிகள் உழவா் மன்றத்துக்கு ரூ.10 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்ட மதிப்பு கூட்டும் இயந்திரங்களை நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும், அங்கு மானாவாரி மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி செய்யப்பட்ட திடல்களையும், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் சுமாா் 5 ஆண்டு தரிசாக உள்ள நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தின்கீழ் பயிரிடப்பட்டிருந்த உளுந்து திடல்களையும் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன், துணை வேளாண்மை அலுவலா் முருகன், வேளாண்மை அலுவலா் அருண்குமாா், உதவி வேளாண்மை அலுவலா்கள் மாரியம்மாள், சுமன், கஸ்தூரி மற்றும் கருவந்தா உழவா் மன்ற விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com