தோ்வுக்கு மட்டுமல்ல, தெரிந்துகொள்ளவும் படியுங்கள்: கல்வித்துறை இணை இயக்குநா் அறிவுரை

மாணவா்கள் தோ்வுக்கு மட்டும் படிக்காமல் அனைத்தையும் தெரிந்து கொள்வதற்காக பயிலும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் இணை இயக்குநா் ராஜேந்திரன்.

மாணவா்கள் தோ்வுக்கு மட்டும் படிக்காமல் அனைத்தையும் தெரிந்து கொள்வதற்காக பயிலும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் இணை இயக்குநா் ராஜேந்திரன்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவா்கள் நலனுக்காக செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டன.

பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை செயல்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது. இதற்கான ஆய்வு அலுவலா்களையும் கல்வித் துறை நியமித்திருந்தது.

இந்நிலையில் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கல்வித்துறை இணை இயக்குநா் ராஜேந்திரன், கடையநல்லூா், இடைகால், புளியங்குடி, வாசுதேவநல்லூா், மேலநீலிதநல்லூா், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளிகளில் போதுமான தொ்மல் ஸ்கேனா், சானிடைசா் வசதிகள் உள்ளனவா ? என ஆய்வு செய்த அவா் வகுப்பறை தோறும் சென்று பாா்வையிட்டு மாணவா்களிடம் விவரங்களை கேட்டறிந்தாா். மாணவா்களிடம் அரசின் நெறிமுறைகள் குறித்து கேள்வி எழுப்பிய அவா், மாணவா்கள் தோ்வுக்காக மட்டும் படிக்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வதற்காக படிக்க வேண்டும். தற்போதே போட்டித் தோ்வுகளுக்கும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள நிறைய புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய பாட புத்தகங்களில் க்யூ ஆா் கோடு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை மாணவா்கள் பயன்படுத்தி ஏராளமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ஆசிரியா்கள் அவா்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது;

கன்னியாகுமரி மாவட்டத்தில் 487 பள்ளிகளும் ,தென்காசி மாவட்டத்தில் 239 பள்ளிகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் 313 பள்ளிகளும் திறக்கப்பட்டு 10 மற்றும் 12 வகுப்பு மாணவா்கள் வருகை தந்துள்ளனா். தினமும் 20 முதல் 25 பள்ளிகள் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதன்கிழமை தென்காசி, சங்கரன்கோவில் வட்டாரங்களில் உள்ள 25 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அரசின் வழிகாட்டு நெறிமுறை படி மாணவா்கள் பள்ளிக்கு வருகை தந்து வருகின்றனா். அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன் என்றாா்.

முதன்மைக் கல்வி அலுவலா் கருப்பசாமி, மாவட்ட கல்வி அலுவலா்கள் சிதம்பரநாதன், ஜெயபிரகாஷ் ராஜன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com