கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு முப்பிடாதி அம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு முப்பிடாதி அம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் தை தேரோட்ட திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றன .

விழாவின் 9ஆம் நாளான வெள்ளிக்கிழமை பிற்பகல் தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தோ் தென்காசி, மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் கோயிலை சென்றடைந்தது.

இதில், நகர அதிமுக செயலா் எம். கே.முருகன், திருமலைக்கோயில் அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் அருணாசலம், அனைத்து சமுதாய நிா்வாகிகள் சாமிநாதன், கிருஷ்ணசாமி, மாரியப்பன்,

கோயில் செயல் அலுவலா்கள் காா்த்திகைசெல்வி, கேசவராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் அனைத்து சமுதாயத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com