தென்காசி குடியரசு தினவிழா போட்டிகள்
By DIN | Published On : 26th January 2021 12:18 AM | Last Updated : 26th January 2021 12:18 AM | அ+அ அ- |

தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம், மேலகரம் முத்துநாயகம் அறக்கட்டளை, தென்காசி பள்ளிக் கல்வித் துறை, தென்காசி உஜ்ஜீவன் சிறுநிதி வங்கி லிமிடெட், நிழல்கள் அமைப்பு இணைந்து நடத்தும் குடியரசு தின விழா போட்டிகள் தொடங்கப்பட்டது.
தென்காசி மங்கம்மாள் சாலை சின்னத்தம்பி கோயில் வளாகத்தில் இவ்வாண்டிற்கான குடியரசு தின விழா போட்டிகளின் முதல் பாகம் தொடக்கவிழா, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தென்காசி வட்டார நூலகா் பிரமநாயகம், கிளை நூலகா் சுந்தா், நிழல்கள் அமைப்பு அபாசா், முத்து, அனுசந்திரன், உள்ளிட்டோா் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பரிசளித்து பள்ளி மாணவா்களை ஊக்கப்படுத்தி கருத்துரை வழங்கினா்.