மேலகரத்தில் சைவ சபை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்

மேலகரம் சிதம்பரனாா் சைவ சபை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திரிகூடராசப்பக் கவிராயா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேலகரத்தில் சைவ சபை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்

மேலகரம் சிதம்பரனாா் சைவ சபை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திரிகூடராசப்பக் கவிராயா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத்தின் கௌரவத் தலைவா் பி. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். அமைப்பின் தலைவா் சங்கர நாராயணன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் பேச்சிமுத்து அறிக்கை வாசித்தாா். ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பழனியப்பன், ராமசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன் உள்பட பலா் பேசினா்.

கூட்டத்தில், முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். வேளாளா் என்ற பெயரை வேறு ஜாதியினருக்கு தாரைவாா்த்துக் கொடுப்பதை கண்டிப்பது. வேளாளா் என்ற பெயரை வேறு சமூகத்தினா் பயன்படுத்த அனுமதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com