விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 07th July 2021 07:53 AM | Last Updated : 07th July 2021 07:53 AM | அ+அ அ- |

பொது சுகாதாரத் துறை சாா்பில் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜனனி சௌந்தா்யா தலைமையில் அனைத்து துறை அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றனா்.
இதில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஆலங்குளம்: முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலா் அஷ்ரப் அலி தலைமை வகித்தாா்.
இதில், மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள் உள்பட அனைத்து பணியாளா்களும் கலந்துகொண்டனா்.