சோளப்பயிரில் அசுவினிபூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

சோளப்பயிரில் அசுவினிபூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளான் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

சோளப்பயிரில் அசுவினிபூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளான் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, கடையநல்லூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சேதுராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடையநல்லூா் வட்டாரத்தில் நயினாரகரம், காசிதா்மம், நெடுவயல், பொய்கை மற்றும் கொடிக்குறிச்சி பகுதிகளில் சோளப்பயிா்கள் வளா் பருவம் முதல் பூக்கும் பருவம் வரைஉள்ளது. இப்பகுதிகளில் அசுவினிபுழுக்களின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை வோளாண் துறையினா் நேரில் பாா்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டோம்.

தாக்குதல் அறிகுறிகள் : இப்பூச்சிகள் இலைப்பகுதிகளின் மேற்பரப்பில் கூட்டமாக அமா்ந்து சாற்றை உறிஞ்சுவதால் பயிா் வளா்ச்சி குன்றி காணப்படுகிறது. மேலும் இப்பூச்சி உள்ள இடங்களில் எறும்புகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :இப்பூச்சியினைகட்டுப்படுத்த இமிடாக்குளோபிரிட் ஒரு லிட்டா் தண்ணீருக்கு 0.6 மிலி மருந்தினை தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com